1.இன்று திருச்சபையிலிருந்து பரிசுத்த ஆவியானவர் எடுத்துக் கொள்ளப்படுவாரானால், நாம் செய்துவரும் காரியங்களில் 95சதவீதம் நடந்துகொண்டுதானிருக்கும்; ஒருவருக்கும் வித்தியாசம்தெரியாது. ஆனால் புதிய ஏற்பாட்டுப் பாணியில் இயங்கும் சபையிலிருந்து ஆவியானவர் எடுத்துக்கொள்ளப்படுவாரானால், அவர்கள் செய்துவரும் காரியங்களில் 95 சதவீதம் நின்று போய்விடும் எல்லாருக்கும் வித்தியாசம் தெரியும்
-
A.W.டோசர்
2.மனிதரது எண்ணங்களையும் கற்பனைகளையும் ஒருங்கிணைக்கப் பரிசுத்த ஆவியானவரின் உயிரூட்டும் சுவாசம் நிறைந்த பிரசன்னம் தேவை. அது இருக்கும்போது, இவ்வுலகிலும் இனி வரும் உலகிலும் மனிதரது இதயங்களில் பரலோகப் பரவசமும் மகிழ்ச்சியின் ஆரவாரமும் காணப்படும்.
- சாது சுந்தர்சிங்
3.நமது இதயங்களில் இறையன்பை ஊற்றுபவர் பரிசுத்த ஆவியானவரே. அதினாலேயே நாம் மனுக்குலத்தை நேசிக்க முடியும் உலகப் பொருள்மீதுள்ள பற்று தளரும்; கீழ்த்தர ஆசைகள் ஒழியும் பார்வை சுத்தமாகும்; செருக்கு அகலும். கோபம், பெருமை, தீயஎண்ணம், ஆகாத விருப்பங்கள் ஆகியவற்றினின்று நாம் விடுவிக்கப்படுவது அவராலேயே
- ஜான் வெஸ்லி
4.வான் புறாவே, உமது செட்டைகளை விரியும்;உலகின் இருளை அகற்றும்; குழம்பித் தவிக்கும் எங்களைச் சீர்ப்படுத்தும்; வெளிச்சம் உண்டாகட்டும்
- சார்ல்ஸ் வெஸ்லி
5.அனுப்பப்படுமுன் ஓடுவதில் என்ன பயன்? தேவ வல்லமையின்றி திருப்பணி செய்ய முயலுவதில் என்ன பயன்? ஆவியின் அபிஷேகமும், ஆவியின் நிறைவும், ஆவியின் பலமும் இல்லாது ஊழியம் செய்பவன் தனது நேரத்தை வீணடிக்கிறான்.
-
D.L. மூடி
6.பரிசுத்த ஆவியானவர் என்பவர் தேவனிடமிருந்து வரும் ஓர் ஆசீர்வாதம் அல்ல; அவரே தேவன்.
- காலின் உர்குவார்ட்
7. திருச்சபையின் இன்றையத் தேவை கூடுதல் வசதிகளோ, சாதனங்களோ, அமைப்புகளோ அல்ல; பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தக்கூடியவர், ஜெப மனிதர், மன்றாட்டு வீரர் ஆகியோரே அத்தியாவசியத் தேவை. செயல்முறைகள் மூலம் அல்ல செயல்வீரர்கள் மூலமாகவே ஆவியானவர் வழிந்தோடுவார். அவர் சாதனங்கள் மீதல்ல, சாமானியர் மீதே இறங்குவார். திட்டங்களை அல்ல, முழங்காலில் நிற்கும் திடகாத்திரரையே அவர் அபிஷேகிக்கிறார்.
-
E.M. பவுண்ட்ஸ்
8.பரிசுத்த ஆவியானவருக்கு நாம் கொடுக்கும் வாய்ப்பு எவ்வளவாய்க் குறைந்துவிட்டது! திருச்சபைகளும் மிஷனரி நிறுவனங்களும் அவரைக் கட்டி வைத்து, ஒரு மூலையில் உட்காரச் சொல்லிவிட்டு, தங்கள் அலுவல்களில் தீவிரமாயிருக்கின்றனர்.
- C.T. ஸ்டட்
9.சுவிசேஷத்தினால் பரிசுத்த ஆவியானவர் என்னை அழைத்தார்; தமது வரங்களினால் என்னைப் பிரகாசிப்பித்தார்; மாறாத சத்தியத்தினால் என்னைக் காப்பாற்றுகிறார்.
- மார்ட்டின் லூத்தர்
10.ஆண்டவரது பிரசன்னம் என்னை மேற்கொண்டது. "என்னைக் கொன்றுவிடாதபடிச் சற்று விலகிக்கொள்ளும்” என்று கெஞ்சத் தோன்றுமளவு அது அவ்வளவு மகிமையாயிருந்தது.
- மொர்தெகாய் ஹாம்
(இவரது கூட்டத்தில்தான் 1934இல் பில்லி கிரஹாம் தன்னைக் கிறிஸ்துவுக்கு ஓப்புக்கொடுத்தார்.)
11.பொருட்களை விளம்பரம் செய்து வியாபாரத்தை மேம்படுத்தும் கலையில் பரிசுத்த ஆவியானவருக்கு நிகர் எவருமில்லை. அவர் ஒரு நபரையே விளம்பரம் செய்வார்; அவர்தான் இயேசு கிறிஸ்து
- கேத்தரின் குல்மேன்
12.கிறிஸ்துவின் மூலம், பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையுடன் அன்பின் பிரவாகத்துடன் நமது இருதயத்தைத் தேவனுக்குமுன் ஊற்றிவிடும்போது அவர் வாக்குப்பண்ணியவை நமதாகும்.
- ஜான் பனியன்
13.சிலுவையிலறையப்படாத எவரும் சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்க முடியாது. அலங்காரத்திற்காக ஒரு சிலுவைச் சின்னத்தைக் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு அலைவதில் என்ன பயன்? பவுலடியார் குறிப்பிடும் சிலுவை என்பது நமது உடலிலும் உள்ளிலும் அச்சாரமாய்ப் பதிக்கப்படுவதாம்.நமது உள்ளான மனிதனில் சிலுவையை அச்சடையாளமாக்குவது பரிசுத்த ஆவியானவரே.
-
A.B. சிம்ப்சன்
14. பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்னர், திருச்சபை எப்பொழுதாவது எல்லா வேலையையும் பத்து நாட்கள் நிறுத்திவிட்டு ஆவியானவரது வல்லமை வெளிப்படும்படிக் காத்திருந்ததுண்டா?
திட்டங்கள், சாதனங்கள், வசதிகள் ஆகியவைதான் நமது கவனத்தை ஈர்க்கின்றன; தேவ வல்லமையைப் பெறுவது பற்றிய கவலையில்லையே.
-Hudson
15.தேவனுடைய ஆவியானவரின் சித்தத்தைத் தேவனுடைய வசனத்தின் வாயிலாகவே தேடுகிறேன்.ஆவியானவரையும் ஆகமங்களையும் சேர்க்கவேண்டும். தேவனது வசனம் இல்லாது,தேவனது ஆவியானவரை மட்டும் நான் நாடினால் வஞ்சிக்கப்பட்டுப்போகத்தான் வழிவகுக்கிறேன்.
-George
16.ஆவியானவரின் வல்லமையைப் பொருத்தவரை அதனை அனுபவித்தல் முதலாவது வரும்; அதனைப் புரிந்துகொள்ளுதலோ கடைசியில் தான் வரும்.
-ஆஸ்வால்டு சேம்பர்ஸ்
17.பரிசுத்த ஆவியின் நிறைவில்லாத திருச்சபை அது இருக்கும் நாட்டிற்குச் சாபம்தான், ஆசீர்வாதம் அல்ல கிறிஸ்தவ ஊழியனே, நீ ஆவியால் நிறைந்திராவிடில் யாரோ ஒருவரது பாதையை மறித்துக்கொண்டிருக்கிறாய்; பழமரமொன்று வளரவேண்டிய இடத்தில் பாழ்மரமாய் நீ நின்றுகொண்டிருக்கிறாய்.
- சார்ல்ஸ் ஸ்பர்ஜன்
18.தேவனது ஆளுகைக்கு உட்படாது மனிதரால் மட்டுமே ஆளப் படும் சபை தோல்வியுறுவது நிச்சயம். வேதக் கலாசாலையில் பயின்றும் ஆவியின் நிறைவு இல்லாத ஊழியத்தில் அற்புதம் எதுவும் நிகழாது.
- சாமுவேல் சாட்விக்
19.இரட்சிக்கப்படாத திரள்கள் தங்களது உயிரற்ற தெய்வங்களை விட்டுவிட்டுக் கிறிஸ்துவை நோக்கிக் கூப்பிடுவதற்காக உயிருள்ள தேவனது அதிசய வல்லமை வெளிப்பட வேண்டுமென்பதே ஆவியானவரால் நிரப்பப்பட்ட வாழ்க்கையின் நோக்கம்.
-
T. L. ஆஸ்போர்ன்
1 கருத்துகள்
Very useful
பதிலளிநீக்குஉங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்